News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பா.ஜ.க., அ.தி.மு.க. அடிமைக் கூட்டணி! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பளிச்!

பா.ஜ.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையில் இருந்தது அடிமைக் கூட்டணி என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளிப்படையாக கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்துக் கொண்டு பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ.க.வில் இருந்து விலகியதை போல மேலும் சில கட்சிகள் விலகக் […]

இந்தியா- ஆஸ்திரேலியா போட்டி! சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நாளை (அக்.8) இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.   ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டித் தொடர் வருகிற நவம்பர் 19ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது.   இப்போட்டித் தொடரில் இந்தியா, […]

மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இரண்டாவது நாள் வருமானவரித்துறையைச் சோதனைமத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில்

முன்னாள் மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்து வரும் இரண்டாவது நாள் சோதனையின் போது, வருமானவரித்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் இரண்டு பேர் வீட்டில் ரகசிய அறைகள்  ஏதும் உள்ளதா? என்று வீட்டின் பின்பக்கத்தில் உள்ள  சுவரை தட்டிப் பார்த்து சோதனை நூங்கம் பாக்தில் உள்ள அலுவலகத்திலும் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது

வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,  வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]

குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்! பரபரப்பான டி.பி.ஐ. வளாகம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து […]

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு  நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் […]

ஆவின் பால் முகவர்கள் குமுறல்! தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிக விலைகொடுத்து தனியார் நிறுவனங்களின் பால் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.   தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள ஆவின் பால் நிறுவனம் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் கிடைத்து வருகிறது. நீலம், பச்சை, ஆரஞ்சு என கிடைத்து வரும் பால் பிஞ்சு குழந்தைகளின் சத்துணவாகவும், தாய்ப்பாலுக்கு நிகராகவும் கருதப்பட்டு வருகிறது.   தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் 50 சதவீதத்துக்கு மேல் திட்டமிடப்பட்டு குறைக்கப்பட்டு வருகிறது. […]

தேசிய மருத்துவ ஆணையை நிறுத்துங்கள்! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

புதிய மருத்துவக் கல்லூரி தொடர்பான தேசிய மருத்துவ ஆணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் புதிய விதிகளை வகுத்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர்கள் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் தடை விதித்துள்ளது. […]

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.   அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் […]

இடைநிலை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார்! வீடியோ வைரல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களுடன் கலந்துரையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் 6வது நாளாக ஈடுபட்டு வந்தனர்.   இதைத்தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுடன் […]