News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்! பக்தர்கள் அதிர்ச்சி!

  செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார்.   மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.   கடந்த 2019ம் ஆண்டு இந்திய […]

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக சொல்வாரா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சங்கரன்கோவிலில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு தொடக்க  விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு உரையாற்றினார். அவர் பேசும் போது, ‘‘நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.  வெற்றி பெற வாய்ப்பில்லை. தி.மு.க. நிச்சயமாக தோல்வியடையும். அ.தி.மு.க.வின் முந்தைய ஆட்சி கால உழைப்பால்தான் தமிழகம் இந்தியாவிலேயே […]

ஓ.பி.எஸ். என் பக்கம் தான்! மனம் திறந்த சசிகலா!

ஓ.பன்னீர்செல்வம் என்றுமே என் ஆதரவாளர்தான் என்று சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது அ.தி.மு.க. மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்றும் உண்மையான அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன்று என்று சூளுரைத்துக் கொண்டிருப்பவர்தான் சசிகலா. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்ற போதிலும் அவருக்கு பல்வேறு சமயங்களில் ஆலோசனைகளையும் கூறி வந்தார் என்பார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தனது தலைமையில் இயங்கும் என்று சசிகலா அறிவித்து, அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, […]

அ.தி.மு.க.வின் 52 ஆண்டு கால சாதனைப்பயணம்! முழு விவரம் உள்ளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 52வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் தங்கள் மகிழ்ச்சியுடன் சேர்த்து இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். சற்று பின்னோக்கி பார்க்கும் போது அ.தி.மு.க. இந்த 52 ஆண்டு காலத்தை எப்படியெல்லாம் கடந்துவந்தது? அதன் ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு. தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் நடிகரும், […]

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டுவிழா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாட்டம்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கோலாகலமான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தலைமை அலுவலகத்திற்கு நுழைந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். பின்னர் அங்கிருந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு, சாக்லேட் உள்ளிட்டவற்றை வழங்கி தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். […]

மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.   சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது? உள்ளிட்ட உட்கட்சி நிர்வாக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.   மேலும் அ.தி.மு.க., பா.ஜ.க. முறிவுக்கு பிறகு பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எவ்வாறு களத்தில் […]

லியோ சிறப்புக்காட்சி விவகாரம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை!

லியோ திரைப்படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.   இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்து நாளை மறுநாள் (அக்.19) வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படம் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில் படத்தை எப்படியாவது வெற்றியடைச் செய்திட வேண்டும் […]

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வெளியுறவுத்துறை  அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படையினர் கைது செய்த 27 தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும் இதில் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

ஒன்றுபட்டு செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்தலாம்! மு.க.ஸ்டாலின் உறுதி!

ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.   தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.   இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.   அப்போது அவர் […]

சோனியா காந்தியை புத்தகம் கொடுத்த வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

  தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் […]