மருது பாண்டியர்களின் நினைவுநாள்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மருது பாண்டியர்களின் நினைவுநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருதுபாண்டியர்களின் 222வது நினைவுநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிவகங்கை மாவட்டம் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் இது குறித்து கூறும்போது, ‘‘சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் மருது பாண்டியர்களின் நினைவுநாள் விழா மற்றும் […]
நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருகிற நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கையில் கூறியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வருகிற டிசம்பர் 9ம் தேதி […]
இந்த 3 நாட்களில் பேருந்துகள் இயங்குமா? முக்கிய தகவல்கள்!

தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 3 நாட்கள் காத்திருப்பு போராட்ட அறிவிப்பால் போக்குவரத்து சேவை முடங்கும் அபாயத்தால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த கொரோனா காலமான 2020ம் ஆண்டு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் சி.ஐ.டி.யு.சி. சார்பில், […]
பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சம்பந்தம் இல்லை! – அமைச்சர் ரகுபதி!

பெட்ரோல் குண்டுவீச்சுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு கிடையாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார். நேற்று (அக்.25) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீசார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, […]
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு! பா.ம.க. கருத்தரங்கம்!

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கட்சிகள், அமைப்புகள் என பலரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பென்னாகரம் […]
ரஜினியுடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த பெருமை! அமிதாப் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்துடன் பணிபுரிவது எனக்கு கிடைத்த மரியாதை என்று நடிகர் அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிட்டுள்ளது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத்பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 170’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தை ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். நேற்று (அக்.25) நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து […]
பெட்ரோல் குண்டுவீச்சு! ஆளுநரை சந்தித்த சென்னை காவல் ஆணையர்!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் சந்தித்து பேசினார். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத், நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிபரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கருக்கா வினோத்தை கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கருக்காவினோத்திடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், கடந்த 2022ம் ஆண்டு பா.ஜ.க. […]
நயன்தாராவின் அடுத்த திட்டம் இதுதான்! ரசிகர்கள் வரவேற்பு!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பிசினஸ் இதுதான் என்று இணையத்தில் வெளியான செய்தியை பார்த்து ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். நடிப்பு, குடும்பம் என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவின் ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரது மார்க்கெட்டை […]
திருவல்லிக்கேணியில் பரபரப்பு! முதியவரை முட்டி வீசிய மாடு!

திருவல்லிக்கேணியில் முதியவர் ஒருவரை மாடு ஒன்று முட்டி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்த 65 வயதான கஸ்தூரி ரங்கன் என்ற முதியவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித்திரிந்து கொண்டிருந்த மாடு ஒன்று கஸ்தூரி ரங்கனை முட்டி தூக்கிவீசியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கஸ்தூரி ரங்கனின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு […]
தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! பசும்பொன் பயணம்!

வருகிற 30ம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 30ம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை […]

