News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

மதுரையில் மேம்பால கட்டுமான பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

  மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்போலோ சந்திப்பு ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா இன்று (அக்.30) கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றுள்ளார். அங்கு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் முழு உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழ் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்துமராமலிங்கத் தேவரின் […]

மரணதண்டடைனயில் இருந்து முன்னாள் வீரர்களை காப்பாற்றுவோம்! பா.ஜ.க. உறுதி!

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை முன்னாள் வீரர்களையும் காப்பாற்றுவோம் என்று பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது. கத்தார் நாட்டில், அல் தஹ்ரா என்ற நிறுவனத்தில் இந்திய கடற்பனை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 8 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டின் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி கைது செய்தனர். மேலும் அந்நாட்டு நீதிமன்றம் 8 பேருக்கும் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. […]

ஆளுநரை சந்தித்த பா.ஜ.க. மேலிடக் குழு! என்ன பேசினார்கள் தெரியுமா?

ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க. மேலிடக்குழுவினர் இன்று சந்தித்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதாக தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அண்மையில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் வீட்டு முன்பாக பா.ஜ.க. கட்சிக் கொடி அகற்றப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 7 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் தாக்குதல் குறித்து […]

கேரளாவில் பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்! முன்னாள் பா.ஜ.க. எம்.பி. மீது வழக்கு!

கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளரின் தோள் மீது கை போட்டு இழுத்து அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பா.ஜ.க. முன்னாள் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (அக்.27) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யும் நடிகருமான சுரேஷ்கோபி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் சுரேஷ்கோபியிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அந்த பெண் பத்திரிகையாளரின் தோளை […]

சந்திரபாபு நாயுடுவை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்! ஆந்திராவில் பரபரப்பு!

சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் தொடர்பான வழக்கில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக் கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் […]

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை குவித்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் […]

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் பலி!

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 80 வயதான சுந்தரம். இவர் செவிதிறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 18ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி […]

குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.27) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆளுநர் மாளிகைக்கு […]

C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]

அவதூறு பேச்சு! பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணைம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்றினார். அதன் கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தேவ்நாராயண் கோவிலுக்கு சென்ற போது நன்கொடை […]