சந்திரபாபு நாயுடுவை கிண்டல் செய்த பிரபல இயக்குனர்! ஆந்திராவில் பரபரப்பு!

சிறையில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்து வெளியிட்ட புகைப்படம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் தொடர்பான வழக்கில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யக் கோரி ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் […]
ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 100 பதக்கங்களை குவித்த இந்தியா!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரரான திலீப் மகாதேவ் கவித் தங்கம் வென்றார். இவர் இலக்கை 49.48 நொடிகளில் அடைந்து சாதனை படைத்தார். திலீப் மகாதேவ் கவித் பெற்றது இந்தியாவின் […]
சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர் பலி!

சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் 80 வயதான சுந்தரம். இவர் செவிதிறனற்ற, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவர் கடந்த 18ம் தேதி சாலையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி […]
குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.27) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆளுநர் மாளிகைக்கு […]
C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]
அவதூறு பேச்சு! பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணைம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்றினார். அதன் கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தேவ்நாராயண் கோவிலுக்கு சென்ற போது நன்கொடை […]
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்! எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய […]
பாரா ஆசிய விளையாட்டு போட்டி! பதக்கங்களை குவிக்கும் இந்தியா!

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வரும் நிலையில் மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் போட்டியில் இந்தியா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அதன்படி பாரா ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. பெண்கள் காம்பவுண்ட் ஓபன் வில்வித்தை மற்றும் ஆண்கள் 1,500 மீட்டர் […]
இஸ்ரேல்- ஹமாஸ் போர்! 8 ஆயிரத்தை கடந்த பலி!

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரால் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி போருக்கு பிள்ளையார் சுழிபோட்டு தொடங்கி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவமும் போர் நிலையை அறிவித்து தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி காசாவில் மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் என அனைத்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி […]
பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]

