News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மீண்டும் ஆட்சி அமைந்தால்…. ம.பி.யில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது.     மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன.   அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் […]

மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை […]

சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]

தொடரும் ஐ.டி.சோதனை! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள […]

தலைமை செயலாளரை திடீரென்று அழைத்து பேசிய ஆளுநர்! தமிழகத்தில் பரபரப்பு!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் […]

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]

தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பழம்பெரும் நடிகரான பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.   பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது 70. ரகு என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.   இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கரக்காட்டக்காரன் […]

இலங்கை செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.   மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.   அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் […]