News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

குத்துச்சண்டை சம்மேளனத்தை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துவிட்டாலும், சாக்‌ஷி உள்ளிட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதனை சரியான நடவடிக்கையாக கருதவில்லை. அவர்களை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த வீரர்களின் பயிற்சியில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.

அதன்பிறகு ராகுல் காந்தி, ‘’பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வருகிறார்

ஒரே ஒரு கேள்வி – இந்த வீரர்கள், இந்தியாவின் மகள்கள், தங்கள் அரங்கில் சண்டையை விட்டுவிட்டு, தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராட வேண்டும் என்றால், அவர்களின் குழந்தைகளை இந்த பாதையைத் தேர்ந்தெடுக்க யார் ஊக்குவிப்பார்கள் இவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அப்பாவிகள், நேர்மையானவர்கள், எளிமையானவர்கள், மூவர்ணக் கொடிக்கு சேவை செய்வார்கள். அவர்கள் முழு மரியாதையுடனும் கௌரவத்துடனும் இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்…’’ என்று பதிவு போட்டுள்ளார்.

இதையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தியின் மணிப்பூர் முதல் மும்பை வரையிலான அடுத்த நடை பயணம்

ராகுல் காந்தியின் இரண்டாம் கட்டப் பயணம் ஜனவரி 14ம் தேதி முதல் மார்ச் 20 வரை சுமார் 6,200 கிலோ மீட்டர் தூரம் நடக்க இருக்கிறார்.  தொடங்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்த பயணத்தில் மணிப்பூர், நாகலாந்து, அஸ்ஸாம், மேகலாயா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, சட்டீஸ்கர், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மட்டும் மஹாராஷ்டிரா இடம் பெறுகிறது. மணிப்பூரில் தொடங்கி மும்பையில் பயணம் நிறைவடைகிறது.

 

ராகுல் காந்தியின் நடைபயண அறிவிப்புக்குப் பிறகு, பா.ஜ.க. அதி சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளது. விரைந்து தேர்தல் அறிவிப்பு செய்து ஏப்ரல் முதல் வாரத்திலேயே தேர்தலை அறிவிக்க திட்டமிடுகிறார்கள். இதனால் ராகுல்காந்தியின் நடைபயணத்துக்கு தடை போட முடியும் என்று நினைக்கிறார்களாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link