Share via:
துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 3வது முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை குறித்து ஏற்கனவே பரிசீலனை செய்து வருவதாக சபாநாயகர் அப்பாவு தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.
இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.
அ.தி.மு.க. சார்பில் 3வது முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கையின் அடுத்த கட்ட நிலை குறித்து சபாநாயகர் அப்பாவு விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.