Share via:
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை ராஜேந்திரன் என்ற பக்தர் காணிக்கையாக கொடுத்துள்ளார். இந்த ராஜேந்திரன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இவை அனைத்தையும் திருப்பதி மலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அர்ச்சகர்கள் உற்சவ மூர்த்திக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்தின் போது பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

