Share via:

நடிகர் சத்யராஜ் பெரியார் கருத்துக்களை பேசுபவர் என்றாலும் எந்த
கட்சியிலும் சேர மாட்டார். பெரியாராக நடித்த நேரத்தில் தி.மு.க.வில் சேர்க்க அழைப்பு
வந்த நேரத்திலும் தட்டிக் கழித்தார். இந்த நிலையில் சத்யராஜின் மகள் திவ்யா இன்று தி.மு.க.வில்
சேர்ந்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
தி.மு.க.வுக்கு ஆதரவாக அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பேசிவரும்
திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவருக்கும் தி.மு.க. தலைவரின் நெருங்கிய
உறவினர் ஒருவருக்கும் இருந்த தொடர்பு காரணமாகவே கட்சியில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுப்பதற்கு உறுதி அளிக்கப்பட்டதால் இன்று காலை
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வந்து முதல்வர் முன்னிலையில் இணைந்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,
‘’நடிகர் சத்யராஜ் அவர்களின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அவர்கள்
தி.மு.க.வில் இணைந்தார். அதுபோது, கழகப் பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச்
செயலாளர் மாண்புமிகு திரு.கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மாண்புமிகு
திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்…’’ என்று கூறப்பட்டுள்ளது.
தன்னுடைய மகள் கட்சியில் இணைவதில் சத்யராஜுக்கு விருப்பம் இல்லை
என்றே கூறப்படுகிறது.