Share via:
அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசி என்பவரது வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறாரகள. இவர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் ஆவார். மேலும் தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை போன்று, தற்போது அவரது முன்னாள் உதவியாளர் காசி வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கு ஆளாகியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.