Share via:
என்.டி.ஏ. கூட்டணி மூலம் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடுவோம்
என்று அமித்ஷ நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதேநேரம், சத்தமே
இல்லாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ராகுலும் பிரியங்காவும் களம் இறங்குவதற்கு விறுவிறுப்பான
வேலைகள் நடந்துவருகின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், மக்களவை எதிர்க்கட்சித்
தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் இருவரும் முக்கிய
நட்சத்திரங்களாகத் திகழ்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி 3ஆவது வாரத்தில்
இருந்து ஒவ்வொரு நபராக மாற்றி மாற்றி தமிழ்நாடு வருகை தர இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி பங்கேற்கும் மகளிர் பேரணியை நடத்த தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளது. இருவரின் பரப்புரைகளை ஒருங்கிணைக்க, காங்கிரஸ்
கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை குழுக்களை அமைத்துள்ளார். விஜய்யிடம் பேசப்படுவதாகச்
சொல்லப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்பதைக் காட்டுவதற்கு இந்த வருகை பயன்படும்
என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், நாடாளுமன்றத்தில் ராகுல்காந்த் எழுப்பிய கேள்விகளுக்கு
அமித்ஷா பதில் அளிக்கவே இல்லை.
தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இந்திய தலைமை நீதிபதி
ஏன் நீக்கப்பட்டார்? டிசம்பர் 2023ல், தேர்தல் ஆணையர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும்
அவர்களை தண்டிக்க முடியாதபடி சட்டத்தை மோடி அரசு ஏன் மாற்றியது? CCTV பதிவுகளை 45 நாட்களுக்குப்
பிறகு அழிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது ஏன்? என்ன மறைக்கப்படுகிறது?
பதில் சொல்லுங்க அமித்ஷா.