Share via:
கடந்த வாரம் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பல
அதிமுக மாஜிக்கள் விஜய் கட்சியில் இணைந்தார்கள். இன்றும் அதிமுக மாஜிக்கள் ஆனந்த் முன்னிலையில்
கட்சியில் இணைகிறார்கள்.
இப்படி அதிமுகவில் இருந்து வரும் விஐபிகளுக்கு பதவி கொடுப்பதற்கு
விஜய் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதன்படி மாவட்டச் செயலாளர்கள் பதவி எண்ணிக்கை
அதிகரிக்க இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது மாநிலம் முழுவதும் 132 மாவட்டச்
செயலாளர்கள் பொறுப்பில் உள்ளனர். நிறைய பேருக்கு பதவி கொடுக்க வேண்டியிருப்பதால் 234
மாவட்டச் செயலாளர்களை நியமிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுவதால்
அந்தந்தப் பகுதியின் உள்ளூர் பிரமுகர்களுடனும் பொதுமக்களுடனும் தினசரி தொடர்பில் இருக்க
முடியும். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை உடனுக்குடன் கட்சித் தலைமையின் கவனத்திற்குக்
கொண்டு செல்லவும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கவும்
உதவும் என்று சொல்லப்படுகிறது.
இந்த திட்டத்தை ஒரே நேரத்தில் செயல்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக
விரிவு படுத்த இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலில் 10 அதிமுக புள்ளிகளுக்கு மாவட்டச் செயலாளர்
பதவி வழங்கப்படுகிறது. இதன் தாக்கம் எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்தபிறகே அடுத்தகட்ட
நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள்.