Share via:
டிசம்பர் 15க்குள் ஒரு முடிவு எடுக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்குவோம்
என்று அறிவிப்பு செய்திருந்த ஓ.பன்னீர்செல்வம், இதுகுறித்து தெளிவு பெறுவதற்கு டெல்லிக்குப்
போயிருக்கிறார். ஆனால், அவரை சந்திப்பதற்கு அமித்ஷா தயாராக இல்லை என்பதால் தர்மயுத்தம்
செய்வதாக சொல்லப்படுகிறது.
பன்னீரை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி சொல்லிவிட்டதால்
பாஜகவுடன் மீண்டும் இணைவாரா, தனிக்கட்சி அறிவிப்பாரா என்று பல்வேறு எதிர்பார்ப்புகள்
உருவாகியுள்ளன. இதில் ஒரு தெளிவான முடிவு பெறுவதற்காகவே துக்ளக் குருமூர்த்தியுடன்
இணைந்து டெல்லிக்குச் சென்றுள்ளார் பன்னீர்.
அமித் ஷா சந்திப்புக்கு மறுத்துவிட்டார் என்றாலும் பாஜக முக்கியத்
தலைவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது. எடப்பாடியை மிரட்டி ஓபிஎஸ்ஸை கட்சியில் மீண்டும்
சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை செய்யவில்லை என்றால் மீண்டும்
தர்மயுத்தம் தொடங்குவது தவிர வேறு வழியில்லை என்று அறிவித்திருக்கிறார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகன், ஓ.பி. ரவீந்திரநாத்தும் டெல்லியில்தான்
இருக்கிறார். தனிக்கட்சி தொடங்கினால் அதை நடத்துவதற்கு பணம் இல்லை அதேநேரம் பாஜகவுடன்
சேர்ந்துவிட்டால் தொண்டர்களிடம் மதிப்பு இருக்காது என்று கெஞ்சியிருக்கிறார்.
தேர்தல் நெருக்கத்தில் வேண்டுமானால் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கலாம்,
இப்போது அவரிடம் எதுவும் பேச முடியாது. மெகா கூட்டணி அமையும் வாய்ப்பை கெடுத்துவிடக்
கூடாது. எனவே அதுவரை சுற்றுப்பயணம் செய்து ஆட்களைத் திரட்டுங்கள் என்று பாஜக உத்தரவு
போட்டிருக்கிறதாம். செங்கோட்டையன் கூட உடனடியாக ஒரு முடிவு எடுத்து கட்சியில் இணைந்துவிட்டார்,
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கவலையில் இருக்கிறார் பன்னீர்.