Share via:
ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில்தான் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை மறுநாள் (அக்.5) டெல்லி செல் உள்ளதாகவும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பாகத்தான் டெல்லி பயணம் அமைய உள்ளது என்று தெரியவந்துள்ளது. பா.ஜ.க. அழைப்பை ஏற்று ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி.தினகரனும் டெல்லி செல்ல உள்ளது அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.