Share via:
0
Shares
செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2019ம் ஆண்டு இந்திய அரசு பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் பங்காரு அடிகளார் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பங்காரு அடிகளாரின் திடீர் மறைவு செய்தி கேட்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.