Share via:
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாண்டலின் ஸ்ரீநிவாசின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மாண்டலின் இசைக்கலைஞரான மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ சுப்பாராஜூ மாண்டலின் ஸ்ரீநிவாசனுக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்க பயிற்சி அளித்தார். 1969ம் ஆண்டு பிறந்த உலகப்புகழ் வாய்ந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் 2014ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
மாண்டலின் ஸ்ரீநிவாசின்9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகழை போற்றும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வடழனி, குமரன் காலனி பிரதான சாலைக்கு ‘‘மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை’’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு நன்றிதெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில், மாண்டலின் ஸ்ரீநிவாசின் தந்தை சத்தியநாராயணா, தாயார் காந்தம், சகோதரர் மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.