Share via:
அரசு பள்ளியில் மாற்றுத்
திறனாளி ஆசிரியருடன் மல்லுக்கட்டிய மஹாவிஷ்ணு கைது அச்சத்தில் ஆஸ்திரேலியாவுக்குப்
பறந்துபோனார். இந்த நிலையில் அவருக்கு பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்திருப்பதை அடுத்து,
கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை கிண்டல் செய்வது போல் பேசியிருக்கிறார்.
எனவே, அவரை விமான நிலையத்தில் கால் வைத்தவுடன் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்திருப்பதாக
சொல்லப்படுகிறது.
அரசு பள்ளியில் நடந்த
விவகாரம் குறித்துப் பேசியிருக்கும் மகாவிஷ்ணு, பள்ளி கல்வித்துறை அமைச்சர ‘அவர் அளவுக்கு
எனக்கு அறிவிருக்கா என்னன்னு தெரியல‘ன்னு
கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதோடு,
’நான் என்ன தவறு செய்துவிட்டேன். நான் எதற்கு ஓடி ஒளிய வேண்டும்? நான் எந்த தவறான கருத்தையும்
கூறவில்லை. நாளை மதியம் சென்னை வருகிறேன். அங்கு வந்ததும்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நேரில் சந்தித்து எனது தரப்பு
விஷயங்களை எடுத்து சொல்வேன்’ என்றும்
தெனாவெட்டாகக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ஏற்கெனவே மாற்றுத் திறனாளியை அவமானப்படுத்தியதாக
பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் வழங்கப்படுள்ளன. அதேபோல் அவரது மஹாவிஷ்ணு பரம்பொருள்
பவுண்டேஷன் மூலம் அன்னதானம் போடுவதாகவும், மெட்டிட்டேஷன் என்றும் ஏகப்பட்ட தில்லுமுல்லு
வசூல் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரங்கள் எல்லாம் தூசு தட்டப்படுகின்றன.
அதோடு, மகாவிஷ்ணு
மீது சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகார்
வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துக்களையும், மாதவாத கருத்துக்களையும்,
மந்திரங்கள் சொன்னால் காற்றில் பறக்கலாம் என்றும் பிஞ்சு செஞ்சங்களில் நஞ்சை விதைப்பதை
போன்று பேசியது மட்டுமில்லாமல் போன பிறவியில் தவறு செய்ததனால் இப்பிறவியில் கூன் குருடு
போன்ற நிலைக்கு நாம் மாறுகிறோம் என மாற்றுத்திறனாளி சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில்
பேசினார்’ என்றும்தட்டிக்கேட்ட ஆசிரியரை மிரட்டியதாகவும் புகார் கொடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் மஹாவிஷ்ணு
தைரியமாகத் திரும்பிவருவாரா என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.