Share via:
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பிசினஸ் இதுதான் என்று இணையத்தில் வெளியான செய்தியை பார்த்து ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
நடிப்பு, குடும்பம் என பிசியாக இருக்கும் நடிகை நயன்தாரா, தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவின் ‘ஜவான்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பெண்களுக்கான நாப்கின் தயாரிப்பு தொழிலை ஆரம்பித்துள்ளார். ‘ஃபெமி9’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாப்கினுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. விஜயதசமியை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.