Share via:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம்
ஏற்றலாம் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், கலவர அபாயம்
ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து பாஜகவினர், ‘’திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை
தீபத்தூணில் தீபம் ஏற்ற மிகப்பெரும் அறப்போராட்டத்தை முன்னெடுத்த ராஜகோபாலன், பிப்ரவரி
4 திருப்பரங்குன்றம் மலை காக்க மதுரை பழங்காநத்தத்தில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கான
தேசபக்தர்களின் அறப்போராட்டம், ஜூன் 22 மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் சங்கமித்த
லட்சோப லட்சம் முருக பக்தர்களின் பிரார்த்தனைக்கு வரம் போன்று திருப்பரங்குன்றம் மலை
உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
எல்லா இந்துக்களும் ஒன்றுகூடி வாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
அதேநேரம் கம்யூன்ஸ்ட் கட்சியினரும் திகவினரும், ‘’கார்த்திகை தீபத்தை
கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் எல்லாவகையிலும் முயலுகிறார்கள். மதவெறி அரசியலை
எந்த நாற்காலியில் அமர்ந்து அமல்படுத்தினாலும் அதை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டின்
மதச்சார்பற்ற சக்திகளுக்கு உண்டு. இந்துத்துவா மதவெறி அரசியலை எதிர்கொள்ள குன்றென நிமிர்ந்து
நிற்போம்…’’ என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம் இஸ்லாமியர்கள், ‘’இந்த ஆண்டு தீபம் ஏற்றணும், அடுத்த
வருசம் அந்த தர்ஹாவுக்குள் முஸ்லிம்கள் போகக்கூடாதுனு உத்தரவு போடணும், ரெண்டு வருசம்
கழிச்சு தர்ஹாக்கு கீழ கோயில் சிதிலங்கள் இருக்கான்னு ஆய்வு செய்ய தொல்லியல் துறையை
வெச்சு தோண்டனும். நாலாவது வருசம் தர்ஹாவை இடிச்சிட்டு கோயில் கட்டணும். தமிழகத்தை
அடுத்த அயோத்தியாக மாற்றுவதுதான் பாஜக பிளான்’’ என்கிறார்கள்.
தமிழகத்தில் மதக் கலவரத்துக்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.
இது நாளை தெரிந்துவிடும்.