சமீபத்தில் தி.மு.க.வினரே அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு இசிஆர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார் கனிமொழி. இந்த நிலையில் கனிமொழி மீது சீமான் மிகக் கடுமையாக தாக்குதல் செய்திருப்பதற்கு தி.மு.க.வினர் யாரும் பதிலடி கொடுக்கவே இல்லை என்பது தி.மு.க.வில் இருக்கும் குழப்பத்தையே காட்டுகிறது.

சமீபத்தில் கனிமொழி, ‘’சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் ஓட்டி வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து அவர்களை விரட்டிச் சென்று அச்சுறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், முறையான விசாரணை மூலம் உடனடியாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என்று நினைப்பவர் நமது முதல்வர்’’ என்று கண்டனம் செய்திருந்தார்.

கனிமொழியே இப்படி பேசிட்டாரே என்று தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நிலையில் சீமானைப் பற்றி பேசிய கனிமொழி, ‘கூலிக்காக பெரியாரை எதிர்க்கிறார்’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு சீமான் கடுமையாக கோபப்பட்டு கனிமொழியின் சாதியை இழுத்திருக்கிறார். ‘’நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை, பெரியார் என்ன பேசினாரோ எழுதினாரோ அதைதான் எடுத்து பேசுகிறேன். அறிஞர் அண்ணா கருணாநிதியை விட வேறு யாராவது பெரியாரை இழிவாக பேசியிருக்கிறார்களா? கனிமொழி கூறும் பெரிய கூலி, கருணாநிதி தான்.

கனிமொழி நீங்கள் ஒரு பெரியாரிஸ்டா? எந்த இடத்தில் பெரியாரிஸ்ட் கடவுள் மறுப்பிலா உங்கள் மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசினீர்கள் அல்லவா? தமிழகத்தில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது தூத்துக்குடியில் போய் நீங்கள் போட்டியிட்டதற்கு காரணம் என்ன? உங்களை தன் சாதிகாரர் என்ன அந்த பகுதி மக்கள் நம்புவதால் அங்கு போட்டியிட்டீர்கள். சாதி ஓட்டுக்காக தான் தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள்.

கனிமொழி எப்படி நாடாராக இருக்க முடியும்? அப்படி என்றால் ஸ்டாலின், ஆழகிரி எல்லோரும் நாடாரா? ஒரு அப்பாவுக்கு எப்படி இரண்டு சாதிகள் இருக்க முடியும்? பெரிய கூலியே உங்க அப்பா தான். அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை. சென்னை ஈசிஆர் சாலையில் திமுக கொடிக்கட்டிய காரில் சென்று பெண்களை விரட்டி இளைஞர்கள் தொல்லை கொடுக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கொடநாடு கொலை விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதற்கு சீமானை எதிர்த்து தி.மு.க.வினர் யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது தான் ஆச்சர்யம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link