Share via:
அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த மாத்தூர் வேலுநகர் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள முதல்கட்ட தகவல்படி, வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஐ.எஸ்.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கல்லூரி செயல்பட்டு வருவதால், கல்லூரியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அங்கு பயின்று வரும் மாணவர்கள் அவரவர் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.