News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஜெயலலிதா நிறுத்திய பென்ஷன் திட்டத்தை ஸ்டாலின் திரும்பக் கொண்டுவந்துவிட்டார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கேக் ஊட்டி கொண்டாடினார்கள். ஆனால், இது அப்பட்டமான சீட்டிங் வேலை என்று அன்புமணி ராமதாஸ் தொடங்கி காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பாகியுள்ளது.

இதுகுறித்து பேசுபவர்கள், ‘’பழைய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஓய்வூதியத்திற்காக எவ்விதத் தொகையும் பிடிக்கப்படுவதில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10% தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசம் செலுத்தும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஊழியர்களிடமிருந்து 10% பங்களிப்பு தொகை பிடிக்கப்படும். அதே அளவு தொகையை அரசம் செலுத்தும்.

பழைய ஓய்வூதிய திட்டம் ஊழியர் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுவது உறுதி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வு பெறும்போது எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கு எவ்வித நிலையான உத்தரவாதமும் இல்லை.

மாதம் 10% வருமானத்தை நீங்களே முதலீடு செய்தால், 8% வட்டி கிடைக்கும் என்று எடுத்துக்கொண்டால், 35 ஆண்டு பணிக்காலம் முடியும்போது உங்கள் கையில் எவ்வளவு இருக்கும்? அந்தத் தொகையில் 25லட்சம் மொத்தமாக எடுத்துக்கொள்ளுங்கள். மீதத்தை 8% வட்டி கிடைக்குமாறு முதலீடு செய்யுங்கள். மாதம் எவ்வளவு கிடைக்கும்? நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு NPS வேண்டுமா, TAPS வேண்டுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

 

பிரியாணி என்று சொல்லி தக்காளி சாதத்தைக் கொடுத்து ஸ்டாலின் ஏமாற்றியிருக்கிறார், கிடைத்த வரையிலும் லாபம் என்று அரசு ஊழியர்களும் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்த ஆட்சியில் இதற்கு நிதி ஒதுக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இதையே பாமக தலைவர் அன்புமணி, “பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாறாக, தேர்தலை மனதில்கொண்டு, அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘’தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) முழு விவரங்கள் வெளிவந்துள்ளன இந்தத் திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்பது தெளிவு; ஆனால் நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமே தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் (State Own Tax Revenue) சுமார் 21-22% ஓய்வூதியத்திற்குச் செலவாகும் என்பது கணிப்பு.

சொந்த வரி வருவாயைப் பெருக்குவதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும் திட்டச் செலவுகளில் மதிப்பீட்டை மிகாமல் பணிகளை முடிக்க வேண்டும். சிக்கனம் முக்கியம் செம்மையான நிதி மேலாண்மையை அரசின் தாரக மந்திரமாக அரசின் எல்லாத் துறைகளும் கடைப்பிடிக்க வேண்டும்..’’ என்று ஸ்டாலின் மண்டையில் குட்டு வைத்திருக்கிறார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link