Share via:
900 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் பரந்தூர் கிராம மக்களை சந்திப்பதற்கு
நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைப் பார்த்தால் தமிழகத்தில் எமர்ஜென்ஸி
சூழல் நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். போராட்டக் களத்தில்
விஜய் சந்திப்பதற்கு தி.மு.க. ஏன் இத்தனை அச்சப்படுகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமையவிருக்கிறது.
ஆனால், இந்த விமான நிலையம் பரந்தூரில் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் கடந்தும்
தொடர்ந்துப் போராடி வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர்
திடலில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்
அனுமதிக் கேட்டிருந்தார்.
விஜய் தங்களின் இடத்திற்கு வந்து தங்களின் கோரிக்கைகளை கேட்க வேண்டும்
என விரும்பியிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றத் தானும் தயாராக இருப்பதாக
விஜய் தெரிவித்திருக்கிறார். ஆனால், காவல்துறை தரப்பில் வெளி மைதானத்தில் வைத்து நடத்த
அனுமதி கொடுக்க மறுத்திருக்கின்றனர்.
இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நேற்று இரவு 1மணி வரை காஞ்சிபுரம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் நடந்திருக்கிறது. அதேநேரத்தில் விஜய் அம்பேத்கர்
திடலுக்கு வர காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆனால், காவல்துறை தரப்பில் பொடவூரில் உள்ள மண்டபத்தில் வைத்து மட்டுமே கூட்டத்தை நடத்த
சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.
இன்று காலை விஜய் வரவிருக்கும் மண்டபத்தை நோக்கி த.வெ.க தொண்டர்கள்
வரத்தொடங்கினர். அவர்களை மண்டபத்துக்கு 8 கிலோ மீட்டருக்கு முன்பாகவே காவல்துறையினர்
தடுத்து நிறுத்தி வருகின்றனர். 8 கிலோ மீட்டருக்குள்ளாக மட்டும் 4 இடங்களில் காவல்துறையினர்
செக்போஸ்ட் அமைத்து ஓவ்வொரு வாகனமாக பரிசோதனை செய்து அனுப்புகின்றனர். த.வெ.க.வினரின்
கார்களாக இருந்தால் அப்படியே மறித்துவிடுகின்றனர்.
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட கூடிய மக்களை மண்டபத்துக்கு
அழைத்து வர த.வெ.க சார்பில் 35 வேன்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த வேன்களிலும்
எந்தெந்த கிராம மக்கள் எவ்வளவு பேர் செல்கின்றனர் என்பதை கணக்கெடுத்தே காவல்துறை அனுப்புகின்றனர்.
அப்படியென்ன பயம் ஸ்டாலினுக்கு..?