Share via:
சனாதனம் பேசி இந்துக்களை உதயநிதி ஸ்டாலின் வம்புக்கு இழுத்தார்.
இதற்கான வழக்கு இன்னமும் நடந்துவருகிறது. இந்த நிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கு
ஏற்றி தொடங்கவேண்டிய நிகழ்ச்சியை கனிமொழி, பறை இசை அடித்து தொடங்கியது வில்லங்கமாகிவருகிறது.
நேற்றைய தினம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நேற்று
சென்னை – முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற நாடக விழாவில் பங்கேற்ற கனிமொழி பறையிசை அடித்து
தொடங்கிவைத்தார்.
அதோடு, ’நம்ம கலை வடிவங்களை பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்;
பறையைக் கூட வேறு யார் யாரோ எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அது எங்களுடைய இசை;
நம்முடைய இசை என்பதை உரக்கச் சொல்லுவோம்..’’ என்றும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசும் இந்து அமைப்புகள், ‘’தேர்தலில் சிற்பான்மையினர்
ஓட்டுகளே முக்கியம் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதனாலே திருப்பரங்குன்றம் விவகாரத்தில்
இஸ்லாமியர்கள் பக்கத்தில் நின்றார்கள். ஸ்டாலினும் உதயநிதியும் அவ்வப்போது இந்துக்களை
மட்டம் தட்டிப் பேசுவார்கள்.
அவர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் கனிமொழியும் இப்போது மட்டம்
தட்டுகிறார். இந்துக்கள் என்றால் இளக்காரமா..? பறையிசையை யாரும் புடுங்கவில்லை. தாழ்த்தப்பட்ட
மக்கள் ஓட்டுக்காகவே இப்படி பேசுகிறார். குத்துவிளக்கு என்பது மங்கலகரமானது. அதன் மகிமையை
அவமானப்படுத்தும் கனிமொழிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார்கள்.
கனிமொழி எதிர்த்து நிற்பாரா… உடனே குத்துவிளக்கு ஏற்றுவாரா என்று
பார்க்கலாம்.