News

Follow Us

டாக்டர் மற்றும் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த 33 வயதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரைச் சேர்ந்த ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் என்ற 33 வயதான டாக்டர் ஜிம் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். 


எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த இவர் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார். அதோடு ஜிம் பயிற்சியாளர் என்ற வகையில் தன்னிடம் பயிற்சி மேற்கொள்பவர்களின் உடல்தகுதி முன்னேற்றம் குறித்தும் அவர் இன்ஸ்டாவில் வீடியோவாக பதிவிட்டு வந்தார். டாக்டர் சான்டோசுக்கும் அவருடன் பணியாற்றி வந்த ஊட்டச்சத்து நிபுணரான சாஞ்செஸ் என்ற பெண் மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயமானது.


இந்நிலையில் சான்டோஸ் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். முதலில் சான்டோஸ் ஸ்டீராய்டு வகை மருந்துகளை உட்கொண்டதால்தான் உயிரிழந்தார் என்று கூறப்பட்ட நிலையில், அதை அவர் பணியாற்றிய மருத்துவமனை மறுத்துள்ளது. சாஸ்டோஸ் மாரடைப்பு ஏற்பட்டுதான் உயிரிழந்தார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளது.


இதைத்தொடர்ந்து சான்டோசை திருமணம் செய்ய இருந்த சாஞ்செஸ் கிடார் வாசித்தபடி பாடும் ஒரு வீடியோவை போஸ்ட் செய்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் எங்களுடைய நெருக்கத்தின் ஒரு சிறிய துளி, என்னுடைய அன்புக்குரியவர் நாங்கள் விரும்பக்கூடிய பாடலை பாடுகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த டாக்டர் சான்டோஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link