Share via:
ஏழாவது நாளாக இண்டிகோ விமானம் பறக்காத காரணத்தால், உலகம் முழுக்க
பயனாளர்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்ய
முடியாத மோடியின் மானம் காற்றில் பறக்கிறது.
சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை, புறப்பாடு என
மொத்தம் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில்
முன்பதிவு செய்திருந்த பயணிகள், பிற ஏர்லைன்ஸ் விமானங்களை நாடும்போது, அதன் கட்டணங்கள்
பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விமானப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இண்டிகோ விவகாரம் சுமூகமாகத் தீர்வதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும்
மேல் ஆகும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்த பயணிகள் கடுமையான சங்கடத்துக்கு
ஆளாகியுள்ளனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள்,
அதன் டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு, பிற ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு
முன்பதிவு செய்ய துவங்கியுள்ளனர். ஆனால், டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகளின் கையில்
பணத்தை கொடுக்காமல் இண்டிகோ ஏர்லைன்ஸ் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
இப்போது உள்நாட்டு விமான டிக்கெட்டுகளுக்கு உச்சவரம்பாக, ஒரு டிக்கெட்க்கு,
500 கிமீ வரையிலான பயண தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.7,500, 1000 கிமீ வரையிலான பயண தூரத்துக்கு
அதிகபட்சம் ரூ.12 ஆயிரம், 1500 கிமீ தூரத்துக்கு அதிகபட்சம் ரூ.15 ஆயிரம், அதற்குமேல்
உள்ள பயணத்துக்கு ரூ.18 ஆயிரம் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உச்சவரம்பு
நிர்ணயித்து உள்ளது.
எனினும், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விதித்துள்ள
பயண கட்டண நிர்ணய உத்தரவை எந்தவொரு தனியார் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களும் முறையாக
அமல்படுத்துவது இல்லை.
விமானத்தில் ஏற்றிய லக்கேஜ்களை திரும்பப்பெற முடியாமல் பல பயணிகள்
தவிக்கிறார்கள். இந்நிலையில் விமானம் இல்லையென்றால் டிரெயினில் செல்லுங்கள் என்று பாஜகவினர்
பதிலளிப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியுள்ளது.
அரசுக்கு சொந்தமாக விமானம் இல்லையென்றால் எத்தனை சிக்கலாகும் என்பதை
அதற்குள் சுட்டிக்காட்டிவிட்டது இந்த நிகழ்வு. மோடி இன்னமும் வாய் திறக்கவில்லை, என்றாலும்
வெளிநாடு முழுவதும் மானம் காற்றில் பறக்கிறது.
