News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று தமிழகமெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

பன்முகத்தன்மை கொண்ட பேரறிஞர் அண்ணா பற்றி பலர் அறியாத பல சுவாரசியமான தகவல்களைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, 1949ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் உள்ள  ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தி.மு.க.வை தி.மு.க.வை உருவாக்கியவர் அண்ணாதுரை. 

குறுகிய காலத்திலேயே தன்னுடைய ஆழமான கருத்துக்களாலும், தமிழுடன் சேர்த்து ஆங்கிலத்தில் பேசி ஆளை கட்டிப்போடும் தனது பேச்சுத் திறமையாலும் தி.மு.க.வை ஒரு பேரியக்கமாக வளர்த்துக் காட்டினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் 3 முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார் என்றால் யாராலும் நம்ப முடியாது. அதைத்தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த அண்ணா, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்த இண்டர்மீடியேட் படிப்பு அவரின் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

பேரறிஞர் அண்ணா அரசியலுக்கு வர காரணமாக இருந்தவர்கள் கல்லூரி ஆங்கில பேராசிரியராஜ வரதராஜன். அதேபோல் மோசூர் கந்தசாமி முதலியார், மணி திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் அண்ணாவுக்கு சங்கத்தமிழை கற்பித்து அவரின் மேடைப் பேச்சுகளுக்கும், சட்டமன்ற உரைகளுக்கும் அடித்தளமாக அமைந்தனர்.

1949ல் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க. தமிழகத்தில் 1967, 1971 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியாகவும், 1977, 1980, 1984 களில் அ.தி.மு.க. ஆட்சியாகவும் இருந்தது. மீண்டும் 1989ல் தி.மு.க., 1991ல் அ.தி.மு.க., 1996ல் தி.மு.க, 2001ல் அ.தி.மு.க. என மாறி மாறி தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஆட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறினார்கள் என்றாலும், இவற்றுக்கு எல்லாம் அடித்தளமிட்டது பேரறிஞர் அண்ணா என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு அரசியல்வாதியாக இருந்த போதிலும் ஒரு எழுத்தாளராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். அதன்படி அரசால் தடை செய்யப்பட்ட அண்ணாவின் நூல்கள் 4, மேலும் 10 திரைப்படங்களில் அண்ணா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார், 11 பத்திரிகைகளில் அண்ணா தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

அண்ணாவின் எழுதி அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் மொத்தம் 13, அண்ணா எழுதிய குறுநாவல்கள் 24, அண்ணா எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை 77, அவர் எழுதிய சிறுகதைகள் 113, அண்ணா எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் 129, அண்ணா நிகழ்த்திய தமிழ்ச் சொற்பொழிவுகள் மொத்தம் 12,775 அண்ணா எழுதிய ஆங்கில உரைகள் மொத்தம் 400, அண்ணாவின் குடும்பத்தாரால் 1,476 கட்டுரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும்போதே மலைப்பாக உள்ளது.

நம் இந்திய நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர் கொடுத்தப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்ற உயர் நோக்கம் கொண்டிருந்த அண்ணா தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் போட்டுக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக நின்றார்.

தமிழ்மொழி பேசும் தமிழர்கள் அதிகம் இருக்கும் பகுதியை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த பெருமை பேரறிஞர் அண்ணாவையே சேரும். அது மட்டுமல்லாமல் இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என பேரறிஞர் அண்ணாவின் குறுகிய கால சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

சங்கத்தமிழை கரைத்துக் குடித்த போதிலும் பேரறிஞர் அண்ணா விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு அண்ணா நிகழ்த்திய உரையில், பழைய குத்துவிளக்கு ஒளியில் இருந்து மின்சார விளக்குக்கு மாறியதன் நன்மைகளையும் கூட விளக்கிப் பேசினார்.

அதோடு விஞ்ஞானம், மனிதனின் அல்லலை எந்த அளவுக்கு குறைத்து இருக்கின்றது என்பது பற்றி எண்ணினால் விஞ்ஞானிகள் முன்பு மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் என்று விஞ்ஞானத்தின் மகிமையை எடுத்துக் கூறினார்.

மேலும் முன்னோர்கள் இவ்வழி சென்றனர். எனவே நானும் அவ்வழியே என்று ஆராயாது சொல்வது விஷய விளக்கம் கிடையாது. விவேகமும் கிடையாது வாத முறையும் ஆகாது என்று தெள்ளத்தெளிவாக பதிவு செய்துள்ளார் பேரறிஞர் அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link