Share via:
ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ஜ.க. வீழ்த்திவிடலாம் என்றும் 2024ம் ஆண்டுக்குமேல் பா.ஜ.க.இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் மகளிர் புடை சூழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, ‘‘இந்திய அரசியல் வானில் கம்பீர பெண்மணியாக நின்பவர் சோனியா காந்தி. இளம் அரசியல் ஆளுமையாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் பிரியங்கா காந்தி என புகழ்ந்து பேசினார். கனிமொழியை பொறுத்தவரை தி.மு.க. தலைவராக மட்டுமல்லாமல், ஒரு அண்ணனாகவும் பெறுமைப்படுகிறேன் என்று தெரிவித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற எண்ணத்தில் பிரதமர் மோடி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையான அக்கறையுடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அவர்கள் கொண்டு வரவில்லை. மசோதா உடனடியாக அவர்கள் அமலுக்கு கொண்டு வந்திருந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என்று மகளிர் இட ஒதுக்கீடு குறித்த தனது நிலைப்பாட்டை பதிவு செய்தார்.
வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சியில் இருக்காது என்றும், ஒன்றுபட்டு செயல்பட்டால் நிச்சயமாக அ.தி.மு.கவை வீழ்த்திவிடலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.
*******