Share via:
மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர் சிவராஜ்சிவ் சவுகான், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இன்று வெளியான தேர்தல் அறிக்கையில், ‘‘ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்றும், கோதுமை ஒரு குவிண்டால் ரூ.2,700க்கும், நெல் 3,100 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்கு இனிப்பான திட்டங்களை வெளியிட்டனர்.
மீண்டும் ஆட்சியமைந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும், லட்லி பெஹ்னா யோஜனா மற்றும் உஜ்வாலா திட்ட பயணிகளுக்கு 450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிண்லிடர் வழங்கப்படும் என்று அந்த தேர்தல் அறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.