Share via:
கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின், சபரீசன்,
உதயநிதி, துர்கா என்று நான்கு அதிகார மையங்கள் இருந்தன. அதேபோன்று இப்போது விஜய்க்கும்
நான்கு அதிகார மையம் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது,
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ், ராம்குமார் ஆகிய நான்கு பேர்களும் விஜய்யின் அதிகார
நகர்வுகளை முடிவு செய்கிறார்கள் என்று புகார் சொல்லப்படுகிறது.
முதல்வர் விஜய்க்கு அன்றாட
அரசு நடவடிக்கைகளில் உதவுவதற்கு முதல்வரின் தனிச்
செயலாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், இவர்களையே
இந்த நான்கு பேர் டீம் ஆட்டிப்படைப்பதாக சொல்லப்படுகிறது.
விஜய் முதல்வரானதும் ஜான் ஆரோக்கியசாமிக்கு
முதல்வரின் அரசியல் ஆலோசகர் என்கிற அரசுப் பதவி வழங்கப்பட்டு, முதல்வர் அறைக்கு அருகிலேயே அமரவைக்கப்பட்டுள்ளார். இதனால், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள், பன்னாட்டு தொழிலதிபர்கள், மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும் ஜான் சொல்வதைக் கேட்டே செயல்பட
வேண்டியிருக்கிறது.
விஜய்யின் நண்பர் விஷ்ணு
ரெட்டிக்கு பொது நிகழ்வு ஆலோசகர் என்ற அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திப்புகளை
பெரும்பாலும் இவரே முடிவு செய்கிறார். அதனால் அமைச்சர்களும் அதிகாரிகளும் இவருக்கு
அதிக மரியாதை கொடுக்கிறார்கள்.
‘த ரூட்‘ எனும் பெயரில் திரையுலக பிரபலங்களின் திறமைகளை புரமோட்
செய்து வந்த ஜெகதீஷ் மூன்றாவது அதிகார மையமாகத் திகழ்கிறார். த.வெ.க வெற்றிபெற
சோஷியல் மீடியாவின் பங்களிப்பு அதிகம், அதை செய்துகாட்டியவர் என்பதால் ஜெகதீஷ்க்கு
செல்வாக்கு அதிகம். எல்லா நேரமும் விஜய்யுடனே இருக்கிறார். சமீபத்தில் பிரதமர் மோடியை சந்திக்க விஜய்
டெல்லி சென்றதபோதும் ஜெகதீஷும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது நபர் திரைப்பட
தயாரிப்பாளரான ராம்குமார். விஜய் ஓய்வெடுப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனியறையில் ராம்குமார்
இருக்கிறார். முக்கிய உத்தரவுகள் எல்லாமே இந்த அறையிலிருந்தே எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
தூய ஆட்சியைக் கொடுப்பதாகச்
சொல்லும் விஜய் இந்த நான்கு பேர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்ற செய்தியை மீடியாக்களுக்கு
கசிய விடுவது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா என்கிறார்கள். அவர் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு
இந்த நான்கு பேரும் இடைஞ்சலாக இருப்பதால், அவர்களைக் காட்டிக் கொடுப்பதாக புகார் கிளம்புகிறது.
விஜய் ஆட்சியின் ஆரம்பமே அமர்க்களமாக
இருக்கிறது.