Share via:
2026 தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
வழங்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயல் தலைமையில் கமலாலயத்தில் மையக்குழு கூட்டம்
தொடங்கியது
எஸ்.ஐ.ஆர். தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவாவில் இருப்பதால்,
இக்கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த மீட்டிங்கை
அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை லீலா பேலஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்த உள்ளதாக தகவல்.
கடந்த 2021 தேர்தலில் 20 சீட் பாஜகவுக்குக் கொடுக்கப்பட்டு அதில்
4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆகவே, இந்த முறையும் அதே 20 சீட் கொடுப்பதற்கே இபிஎஸ்
தயாராக இருக்கிறார்.
அதேநேரம், தமிழகத்தில் பாஜக அபரிதமாக வளர்ச்சி அடைந்துவிட்டது
என்பதைக் காரணம் காட்டி 40 தொகுதிகள் கேட்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம்,
என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன், பன்னீர் இணைய வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியாக
இருக்கும் என்று தெரிகிறது.
இன்றைய கூட்டத்தில் சீட் பற்றி முடிவு எடுப்பதற்கு வாய்ப்புகள்
இல்லை. அதேநேரம் பன்னீர், டிடிவி தினகரன் பற்றி இபிஎஸ் தெளிவான வரையறைகளைத் தெரிவிப்பார்
என்பது உறுதியாகியுள்ளது. ஆகவே, இன்றைய சூழலை அத்தனை பேரும் ஆர்வமாக பார்த்துவருகிறார்கள்.