News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர்.

அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஐ.எஸ்.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் கல்லூரியில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் அங்கு பயின்று வரும் மாணவர்கள் அவரவர் அடையாள அட்டைகளை காண்பித்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து எ.வ.வேலுவின் அவரது மகன் கம்பனின் வீடு, அலுவலகங்களிலும், அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், புதிதாக 7 இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அதோடு மட்டுமல்லாமல் எ.வ.வேலுவின் நெருங்கிய ஆதரவாளரான அருணை கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் துரை வெங்கட்டின் வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறையினர்,  தானிப்பாடியில் வசித்து வரும் நெல் வியாபாரி முருகேசன் என்பவரின் வீடு, ரைஸ் மில், மினரல் வாட்டர் கம்பெனி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தினர்.

அதேபோன்று கம்பி வியாபாரியாஜ ஜமாலின் வீடு, குடோன், பெட்ரோல் நிலையத்திலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியானது.

கரூர் மாவட்டத்தில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு, நிதி நிறுவனத்லும், பெரியார் நகரில் உள்ள திமுக பிரமுகர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீட்டிலும் தொடர்ந்து 3 நாட்களாக சோதனை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் பீளமேடு அலுவலகம் மற்றும் செந்தில் குமார் என்பவரின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 3ம் தேதி தொடங்கிய வருமானவரித்துறையினரின் சோதனை இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருவது தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை அதிகரித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link