News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ள தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க.வினர் பங்கேற்றுள்ளனர்.

 

நாளை மறுநாள் (18ம் தேதி) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், இன்றைய தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அரசியல் பிரமுகர்கள் மத்தியில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

 

நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரை தி.மு.க. எம்.பி.க்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தமிழகம் சார்பில் முன்வைக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் என்னென்ன என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்களுக்கு விளக்கி கூறி வருகிறார். 

 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் மற்றும் பாரத் என்ற பெயர் மாற்றம் உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் தி.மு.க.வின் நிலைபாடு எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link