Share via:
தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள 9 பெண் பிரமுகர்களை கனிமொழி எம்.பி. அழைத்திருந்தார்.
இதற்கிடையில் நேற்று மைதானத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உடன் கனிமொழி எம்.பி.யும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அப்போது புத்தகம் ஒன்றை சோனியா காந்தியின் கைகளில் கொடுத்த முதலமைச்சர் சிறந்த வரவேற்பை அளித்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், டி.ஆர்.பாலு எம்.பி., தயாநிதிமாறன் எம.பி., கனிமொழி எம்.பி. மற்றும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.