News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை தற்போது 632 ஆக அதிகரித்துள்ளது. தோண்ட தோண்ட சடலங்களாக கிடைப்பதால பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுதான் மொராக்கோ. இங்கு நேற்று இரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை பார்த்தோமேயானால் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் குடும்பத்துடன் வீட்டைவிட்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் இரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் போனது.

அதன்படி   மாரகேஷ், அல் ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் 296 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப்பணியின் போது மேலும் பல சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது பலி எண்ணிக்கை 632 என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மொராக்கோ நாட்டு அரசு. மேலும் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link