Share via:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி
மாவட்டங்கள் கடுமையான புயல், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் எடப்பாடி பழனிசாமி
மட்டும் கல்யாண விருந்து சாப்பிடுகிறார் என்று ஒரு செய்தியை தி.மு.க.வினர் தொடர்ந்து
பரப்பிவருகிறார்கள். இந்த பொய் செய்திக்கு அ.தி.மு.க. கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
தி.மு.க.வின் முக்கியப்
பிரமுகரான ராஜீவ்காந்தி இன்று, ‘’மிஸ்டர் எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி கல்யாண வீட்டில்
சோறு வெஜிடேரியா அல்லது நான்-வெஜிடேரியனா? எந்த மக்கள் எந்த மழை வெள்ளத்தில் கிடந்தால்
நமக்கு என்ன?? நமக்கு சோறு தான் முக்கியம் என்று கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
இதற்கு அ.தி.மு.க.வின்
ஐ.டி. விங் சார்பில் ராஜ்சத்யன், ‘’இன்று காலையோ – நேற்றோ மாண்புமிகு அண்ணன் புரட்சித்தமிழர்
எடப்பாடி பழனிசாமி அவர்கள் எந்த திருமண நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை. நவ.7 என்று
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அவர்களை ஒரு இல்லத் திருமண விழாவில் அகில இந்திய பார்வர்ட்
பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் சந்தித்த புகைப்படத்தை இன்று
நடந்தது போல் பொய் செய்தி பரப்புகிறார்கள்.
இன்று நாள் முழுவதும்
புயல் குறித்து விசாரித்து, மக்களுக்கு கழகத்தின் சார்பில் மேற்கொள்ளவேண்டிய உதவிகள்
குறித்து கழக நிர்வாகிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்துடன், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூரில்
விளைநிலங்களை நேரடி கள ஆய்வு செய்ததுடன், நாகலாபுரம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட
இடங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆதரவு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
நாம் தமிழர் கட்சியில்
இருந்தபோது திமுக குறித்த பல்வேறு உண்மைகளைப் பேசியதாலோ என்னவோ, திமுக தனது பொய்களை
தொடர்ந்து ராஜீவ்காந்தி வாயிலாக பரப்பி வருகிறது. சோறுதான் முக்கியம் என்று கொண்ட கொள்கையை
விட்டு விட்டு , அது வேற வாய் -இது நாற வாய் என்று பேசி கொண்டிருக்கும் நீங்கள் விமர்சனங்கள்
செய்ய தகுதி இழந்து வெகு நாளாகிறது.
மாண்புமிகு கழகப்
பொதுச்செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து பொய் செய்தி வெளியிட்டால்
உங்கள் மீது அ.தி.மு.க. ஐ.டி விங் சார்பில் சார்பில் வழக்கு தொடரப்படும்…’’ என்று எச்சரிக்கை
செய்திருக்கிறார்.