Share via:
முகுந்தனை கட்சிக்குள் கொண்டுவர ராமதாஸ் முயற்சி செய்த நேரத்தில்தான்
பாமகவில் பஞ்சாயத்து தொடங்கியதாக நிர்வாகிகள் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்த
விவகாரம் நீண்ட கால பஞ்சாயத்து என்கிறார்கள்.
இதுகுறித்து பேசுபவர்கள், ‘’2024 டிசம்பர் மாதம் சங்கமித்ரா திருமண
மண்டபத்தில் முகுந்தனை இளைஞரணி பதவி கொடுத்த போது தான் பிரச்சனை பொதுவிற்கு வந்தது
என்று எண்ணினோம். ஆனால் அன்புமணி 2023 லேயே ஒரு போலி ஆணவம் உருவாக்கியுள்ளது இப்போது
தான் தெரிகிறது.
பாமகவின் தலைவராக பதவி ஏற்று இது வரை அன்புமணி என்னவெல்லாம் செய்தார்
என்று பார்த்தால்…? முதலில் ஜிகேமணியின் மகன் தமிழ்குமரனின் நியமன கடிதத்தை கிழித்து
போட சொன்னார், அதன் பிறகு அவரை பற்றி முகநூலில் டார்கெட் செய்து பதிவுகள் போட வைத்தார்.
அதிமுக கூட்டணியில் இணைய இருந்த பாமகவை பாஜக கூட்டணியில் இணைய
சதி செய்தான், தர்மபுரியில் டம்மி வேட்பாளரை முதலில் அறிவித்து பின் அவனை மாற்ற சொல்லி
இவரே பணம் கொடுத்து பேச வைத்து தன் மனைவியை நிறுத்தினார்.
இன்று அய்யாவை குழந்தை என்றும் ஜிகேமணியை மனிதனாக கூட கருத முடியாது
என்றும் பேசுகிறார். ஆனால், அவர்தான் கடந்த ஆண்டு தேர்தலில் தன் மனைவிக்காக பிரச்சாரம்
செய்ய வைத்தார், அப்போது அய்யா குழந்தையாக இல்லையா? ஜிகேமணி துரோகியாக தெரியவில்லையா..?
அய்யாவின் சமூக வளைதள கணக்குகளை ஏன் முடக்கினார்? அய்யா அமரும்
இருக்கையில் ஒட்டுகேட்பு கருவியை ஏன் வைத்தார்? 2023 ஆம் ஆண்டு ஏன் பொதுக்குழு நடந்ததாக
போலி ஆவணம் தயாரித்தார்?
.பாமக வின் அலுவலக முகவரியை ஏன் டி-நகருக்கு மாற்றினார்? உடன்
பிறந்த அக்காவை பற்றி நா கூசும் அளவிற்கு ஆபாசமாக எழுதுபவர்களை ஏன் அரவணைத்து பதவி
கொடுத்தார்’’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் சிபிஐ விசாரணை வேண்டும் என்று ராமதாஸ்
கொடுத்த புகார் வேலை செய்யும் என்றே தெரிகிறது.