Share via:
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணைம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்றினார். அதன் கடந்த 20ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடி தேவ்நாராயண் கோவிலுக்கு சென்ற போது நன்கொடை வழங்கியதாகவும், அதில் வெறும் 21 ரூபாய் மட்டுமே இருந்ததாகவும் தொலைக்காட்சிகளில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் தனிப்பட்ட பக்தியை, பிரியங்கா காந்தி அவமதித்துவிட்டார் என்று பா.ஜ.க. சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக தேர்தல் ஆணையம், பிரியங்கா காந்திக்கு தேர்தல் விதிமீறல் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீசுக்கு வரும் திங்கட்கிழமை மாலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.