Share via:
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பியடித்துள்ளது. அவர்களுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லை என்று மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சாடியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் 2ம்கட்ட தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாகர் மாவட்டம் ரஹ்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, ‘‘முதல்வர் சிவராஜ்சிங் கவுகான் ஒரு நல்ல நடிகராக இருப்பதால் மும்பைக்கு சென்று நடிக்கலாம். மத்தியபிரதேசத்திற்கே இதனால் பெருமை வந்து சேரும் என்று தெரிவித்தார்.
மேலும் வருகிற 17ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு விடைகொடுப்பார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மத்தியபிரதேசத்தின் எதிர்காலமே இந்த தேர்தலில் தான் உள்ளது. பணத்தின் அடிப்படையில் இயங்கும் பா.ஜ.க.விற்கு மத்தியபிரதேசத்தில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்த அவர், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக உறுதியளித்த சவுகான், குறைந்த பட்சம் காலி பணியிடங்களையாவது நிரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பியடிக்கின்றனர். அவர்களுக்கு சொந்தமாக யோசிக்கும் திறன் கிடையாது. அவர்களின் அறிக்கையை பொய்யானது என்று கமல்நாத் கடுமையாக விமர்சித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.