Share via:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு வருகிற நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் முகாம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிக்கையில் கூறியுள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யரபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘தமிழகம் முழுவதும் நாளை (அக்.27) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக உரிய விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வருகிற டிசம்பர் 9ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கு படிவங்களை அளிக்கலாம். பெறப்படும் படிவங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.