News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் இடமாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேரை தமிழக அரசு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.   தமிழகத்தில் சமீப நாட்களாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.   அதன் ஒரு பகுதியாக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளது. இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீதான உத்தரவு பிறப்பித்துள்ளார்.   அதில், கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜெகநாதன், வணிகவரித்துறை […]

முதலமைச்சர் உயர்நீதிமன்றத்தின் கீழ்வழக்கறிஞர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் […]

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர்களை சந்தித்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் திரு. ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் திரு. சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் திரு.வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக புதிய வரி நிலுவைத் தொகை சமாதானத் திட்டத்தை […]

தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் நா. எழிலன், திரு. ஏ.ஜி. வெங்கடாச்சலம், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், இ.ஆ.ப., அரசு துறைச் செயலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திரு. கமல் கிஷோர், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள், மாநில […]

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி வெளியுறவுத்துறை  அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம். இலங்கை கடற்படையினர் கைது செய்த 27 தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.  மேலும் இதில் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மகளிர் அணி ஒருங்கிணைப்பில், மகளிர் உரிமை மாநாடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 14.12.2023 அன்று நந்தனம் ஒய்எம்.சி.ஏ. திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கழக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் இந்திய காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் அவர்களின் சிலையினை நியூ பரிசாக வழங்கினார்.   மேலும் மகளிர் உரிமை மாநாட்டில் தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் […]

இரண்டாவது நாளாக நாகப்பட்டினம் – இலங்கை பயணிகள் கப்பல் இயக்கம்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் தனது இரண்டாவது நாள் பயணத்தை இன்று துவங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் மார்ட்டினி ன் வீடு மற்றும் அலுவலகங்களில் 5 ஆவது நாளாக சோதனை!

கோவையில்  தொழிலதிபர் மார்ட்டினி ன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருவமானவரி துறையினர் 5 ஆவது நாளாக சோதனை.  தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐந்தாவது நாள் சோதனையை செய்து வரும் வருமான வரித்துறையினர். கோவையில் தொழிலதிபர் மார்ட்டின் அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இவர் லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது […]

குழந்தை திருமண எதிர்ப்புக்கான உறுதிமொழி எடுத்த பள்ளி மாணவிகள்

குழந்தை திருமணம் இல்லாத தமிழ்நாடு என்ற உறுதிமொழியை மாணவிகள் எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.  

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை துவைக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு அவர்களின் இடத்தைத் தேடிச்சென்று உணவளிக்கும் திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தியா தன்னிறைவு அடைந்ததாக சொல்லப்பட்டாலும், இன்றும் இந்நாட்டில் உணவற்று தவிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உலக பட்டினி குறியீட்டில் இன்றும் இதனை மாற்றும் முனைப்பில் திரு ஆலன் அவர்கள் இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார். உணவற்ற ஏழைகளுக்கு ஒரு வேளை உணவளிக்க வெறும் 35 ரூபாய் தான் செலவாகிறது.  நாம் […]