தி.மு.க. வார்டு உறுப்பினர் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க. வார்டு மன்ற உறுப்பினர் இல்லத்திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக 87-வது வார்டு மாமன்ற உறுப்பினரான டாக்டர் ஏ.பி. பூர்ணிமா& கே.ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அமைச்சர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்றது. இத்திருமண விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவருடன் லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

சென்னை வருகை தந்திருந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்று காலை திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று (அக்.27) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு சென்னைக்கு வந்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 6.50 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், ஆளுநர் மாளிகைக்கு […]
C.S.K. ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன எம்.எஸ்.தோனி!

2024ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி விளையாட உள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனியை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது என்று கூறலாம். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் […]
வேலை நிறுத்தம்! லாரி உரிமையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 9ம் தேதியன்று தமிழ்நாட்டில் லாரிகள் இயங்காது என்று லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.50 லட்சம் லாரிகள் இயங்கி வருகிறது. டீசல் விலை உயர்வை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகத்தில் பசுமை வரியும் அதிகரித்துள்ளது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500ல் இருந்து 750 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596ல் இருந்து ரூ.4,550 ஆக உயர்ந்துள்ளது. […]
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர்! எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனு!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். சண்டை, சமாதான பேச்சுவார்த்தை என பல்வேறு கட்டங்களை தொடர்ந்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பு வகித்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 66 இடங்களை கைப்பற்றிய […]
தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்! வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 11 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி இப்பட்டியலில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் என்ற வகையில் மொத்தம் 3.10 கோடி பெண் வாக்காளர்களும், 3 கோடி ஆண் வாக்காளர்களும், […]
மீண்டும் இணைந்த தேசிய விருது கூட்டணி! ‘‘சூர்யா 43’’ அப்டேட் உங்களுக்காக!

‘சூர்யா 43’ திரைப்படத்திற்காக தேசிய விருது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 43’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தேசிய விருது வாங்கிய ‘சூரரைப்போற்று’ படக்குழுவினர் இணைந்துள்ளனர். அதன்படி இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா […]
4 பேர் கொண்ட பா.ஜ.க. குழு தமிழகம் வருகை! தீவிர ஆலோசனை!

பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வருகைபுரிய உள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பனையூர் இல்லம் முன்பாக நடப்பட்ட பா.ஜ.க. கொடிக் கம்பம் அகற்றப்பட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் மத்தியிலும் பற்றி எரிகிறது. இதனால் தமிழக அரசு பா.ஜ.க.வை வெறுப்புணர்வுடன் கையாண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் ஒடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து […]
தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்கியுள்ளது. அதன் முன்னோட்டமாக தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மாவட்ட […]
பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் மேலும் 2 வழக்குகளில் கைது!

கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜ.க.வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனத்தை […]

