விஜயகாந்த்தை வைச்சு அரசியல் வியாபாரம் தொடங்குகிறாரா பிரேமலதா..?

வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்பட்ட விஜயகாந்த் உடல்நிலை திடீரென சிக்கலானது. இதையடுத்து ஒட்டுமொத்த தமிழக மக்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனைக்கே சென்று பார்த்து வந்தார்கள். விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என்று அத்தனை பேரும் பிரார்த்தனை செய்தார்கள். ஒருவழியாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். விஜயகாந்த் பூரண நலம் அடைந்துவிட்டார் என்று மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பு, அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. ஆனால், அதற்குள்ளாக […]
நீர்வழித்தடங்களில் வெள்ள பாதிப்புகள்! அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் காரணமாக நீர்வழித்தடங்களில் ஏற்பப்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (டிச.11) நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நீரில் மூழ்கின. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் அவதிக்குள்ளானார்கள். […]
ஷபீருக்கு அடுத்து சிக்கிட்டாருய்யா ஆவுடையப்பன்… எல்லை மீறும் தி.மு.க.

சென்னையைப் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலில் தி.மு.க.வினர் முந்தைய ஜெயலலிதா போன்று செயல்படவில்லை என்று விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களை தி.மு.க. ஆதரவு உடன்பிறப்புகள் புரட்டிபுரட்டி அடித்துவருகிறார்கள். மழை வெள்ளப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், பல்வேறு பத்திரிகையாளர்களும், மீடியாக்காரர்களும் தி.மு.க. அரசை குறைகூறத் தொடங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் ஆகியோர் பம்பரமாக சுழன்றபோதும், தி.மு.க.வை விமர்சனம் செய்பவர்களை எல்லாமே எதிரிகள் என்ற கண்ணோட்டத்தில் தி.மு.க. ஆதரவாளர்கள் விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து நியூஸ் மினிட் தன்யா […]
ரஜினிகாந்த் பிறந்தநாள்! சமூகவலைதளத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை இன்று (டிச.12) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், முதலில் தனது வாழ்க்கையை ஒரு பேருந்து நடத்துனராக ஆரம்பித்து பின்னர், சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது மறைந்த இயக்குனர் இமயம் பாலச்சந்தர்தான். ரஜினிகாந்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட பாலச்சந்தர், ரஜினிகாந்த்தை முதன்முதலாக அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் […]
மாணவர்களை மயக்கும் ஹூக்கா பார்ட்டிகளை விரட்டி விரட்டி கைது செய்த போலீஸ்

சென்னையில் கல்லூரி மாணவ, மாணவியர்களை குறி வைத்து ஹூக்கா பார் ரகசியமாக இயங்கி வருகின்றன. இந்த தகவல் தெரியவந்ததும், சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்யும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கபப்ட்டு தேடுதல் வேட்டை நடந்தது. நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவுக்குக் கிடைத்த ரகசிய தகவல்கள் […]
ரூ.6,000 நிவாரண தொகை! 3 தவணையாக வழங்கப்படுகிறதா?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் இத்தொகை 3 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொது மக்களின் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. பலர் வீட்டை […]
காஷ்மீர் போன்று தமிழகத்தை இரண்டாகப் பிரிக்குமா பா.ஜ.க. அரசு..?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, அதை யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க. அரசு மாற்றியது. இது தொடர்பான வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு எடுத்த முடிவு சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு பா.ஜ.க.வை ரொம்பவே குஷிப்படுத்தியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில […]
மாமியார் கலாய்க்கிறது சரத்குமாருக்குத் தெரியலையா..? பா.ஜ.க.வுக்கு புது ரூட்டு

திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ‘உங்களை எப்போது முதலமைச்சரா பார்ப்பேன்னு என் மாமியார் கேட்கிறார்’ என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் கலகலப்பான விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளான பிறகும் கவுன்சிலர் ஆகவே வழியில்லாத மாப்பிள்ளையைப் பார்த்து மாமியார் கிண்டல் செய்ததை, நிஜமென்று நம்பி ஆதங்கப்படுகிறாரே என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், அந்த குறும்புக்கார மாமியாரு யாருங்க என்று அவரது அத்தனை மாமியார்களையும் தோண்டியெடுத்து வம்பு இழுக்கிறார்கள். அதேநேரம், சரத்குமார் வேண்டுமென்றேதான் […]
அட்டை பெட்டியில் கொடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டிக்குள் வைத்து கொடுத்த விவகாரம் தொடர்பாக பிணவறை உதவியாளரை பணியிடை நீக்கம் செய்ததோடு, லஞ்சம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுவது பொய் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கன்னிகாபுரத்தைச் சேர்ந்த மசூத், சவுமியா தம்பதிக்கு கடந்த 5ம் தேதி குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து மசூத், குழந்தையின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று (டிச.10) குழந்தையின் உடலை […]
மிக்ஜாம் புயல் பேரிடர்: காப்பகத்தில் தயாநிதிமாறன் எம்.பி. நிவாரண உதவிகள்!

மிக்ஜாம் புயல் பேரிடரை தொடர்ந்து சேத்துப்பட்டில் அமைந்துள்ள சர்வோதயா காப்பகத்திற்கு நேரில் சென்ற தயாநிதிமாறன் எம்.பி., அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்த மிக்ஜாம் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் […]

