News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அன்புமணியை கதறவிடும் எடப்பாடி பழனிசாமி. குஷியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும், அந்த கட்சிக்கு 36% வாக்கு வங்கி இருக்கிறது. இந்த வாக்கு யாருக்குச் செல்லும் என்பது தான் இப்போது கேள்வியாக மாறி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் சீக்ரெட் மூவ் அன்புமணிக்கு ஆப்பு வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பிரச்சார நிகழ்ச்சியில் அதிமுகவினர் கட்சிக் கரை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. அதோடு, அன்புமணியும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களை போட்டு மாம்பழத்துக்கு வாக்கு […]

ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு. விஜய் டெரர் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக பரிசு வழங்கி பாராட்டும் விழா இன்று நடத்தப்பட்டது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘’இன்று நான் நீட் தேர்வு பற்றி பேசவேண்டி இருக்கிறது. ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்த தேர்வு நியாயமானதாக இல்லை’’ என்று முதன்முதலாக மத்திய அரசு மீது வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். குறிப்பாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. அதோடு, […]

ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து! சென்னையில் பரபரப்பு!

சென்னை அடையாறில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் டீசல் பேருந்துக்கு மாற்றாக சிஎன்ஜி எனப்படும் எரிவாயு பயன்படுத்தி அரசு பேருந்துகளை இயக்க சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் குறைவான விலையில் பேருந்துகள் இயக்கப்படுவதுடன் அதிக மைலேஜ் கிடைக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை அடையாறு பணிமனையில் இருந்து பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை பயணிக்கும் தடம் […]

சென்னை யூடியூபர் கடத்திய 267 கிலோ தங்கம்! அதிர்ச்சி தகவல்கள்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ அளவுக்கு  தங்கம் கடத்தல் நடந்திருக்கும் சம்பவம் சுங்கத்துறை அதிகாரிகளின் தலையை சுற்றவைத்துள்ளது.   பொதுவாக விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு போதைப்பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், அரிய வகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தும் கடத்தல் கும்பல் பல்வேறு யோசனைகளை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அவை பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு […]

டெல்லியில் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் குடியரசுத்தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அதற்கேற்றவாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. முதல் காவல்நிலையத்தில் பணியாற்றிய […]

அண்ணாமலை அரசியல் அம்புட்டுத்தானா..?  லண்டனுக்கு பேக்கப்.

அரசியல் படிப்பதற்காக அண்ணாமலை லண்டனுக்குச் செல்வதாக கூறப்படும் விவகாரம், அவரை தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்தும் விஷயம் என்று சீனியர்கள் குஷியில் இருக்கிறார்கள். ஆனாலும், ‘அண்ணாமலை லண்டன் கோர்ஸ் முடிச்சதும் தமிழகம் திரும்பி புதிய ஸ்கெட்ச் போட்டு தமிழக முதல்வரா ஆயிடுவார்’’ என்று அவரது வார் ரூம் தினமும் புதுப்புது தகவல்களை வெளியிட்டு அவரது ஆதரவாளர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், […]

தேர்தல் வந்துட்டா அன்புமணியை கையில் பிடிக்க முடியாது. இடஒதுக்கீடு போராட்டம்.

பொதுத் தேர்தல், இடைத் தேர்தல் என ஏதாவது வந்துவிட்டால் உடனே டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணி ராமதாஸ்க்கும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த வகையில் இப்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அன்புமணி வன்னியர் ஓட்டுகளை வளைப்பதுடன் அ.தி.மு.க. வாக்குகளுக்கும் அடி போடுகிறார். இத்தனை நாட்களும் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்தவர்களை கண்டுகொள்ளாத அன்புமணி இடைத்தேர்தலை முன்னிட்டு விக்கிரவாண்டி தொகுதிக்குள் அடங்கியிருக்கும் பாப்பனப்பட்டி நினைவுத் தூணில் மலர் அஞ்சலி செலுத்தினார். சாணிமேடு கிராமத்தில் பிரசாரம் செய்த […]

மோடி சட்டத்துக்கு எடப்பாடியும் எதிர்ப்பு. மீண்டும் இந்தித் திணிப்பு..?

ஜூலை 1 முதல் அறிமுகமாகியிருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில் ஸ்டாலின் அரசும் எடப்பாடி பழனிசாமியும் இந்த விஷயத்தில் ஒரே நேர்க்கோட்டில் நிற்பது ஆச்சர்யத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கில், ‘இந்தி, சமஸ்கிருதம் தெரியாத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு இந்த சட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். […]

பாட்ஷாவாக மாறிய பப்பு ராகுல். மோடி, அமித் ஷா திணறல்

கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சி இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்துவந்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.க.வினரால் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல்காந்தி, நேற்றைய தினம் மக்களவையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை கிழிகிழியென கிழித்து எறிந்துவிட்டார். மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய ராகுல் காந்தி, ”உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. ஒட்டுமொத்த […]

பானிபூரியில் புற்றுநோயை உருவாக்கும் அமிலங்கள்! அதிர்ச்சி தகவல்கள்!

ஒவ்வொரு தெருமுனையிலும் பானிபூரி கடைகளை எளிதாகக் பார்க்க முடிகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் தயாரிக்கும் பானிபூரிக்கென்றே வாடிக்கையாளர்கள் அலைமோதுவதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. சிறியவர்கள் முதியவர் பெரியவர்கள் வரை பானிபூரியை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். அப்படி சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரிகள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுந்தாலும், அதை சற்றும் பொருட்படுத்தாமல் பானிபூரியை வாங்கி சுவைப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமற்று இருப்பதாக உணவுப் […]