கூல் லிப் விற்பனை செய்வர்கள் மீது குண்டாஸ்! பரபரப்பு தகவல்கள்!

கூல் லிப், விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரபரப்பு கேள்வியை எழுப்பியுள்ளார். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் கூல் லிப், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக நாள்தோறும் செய்திகள் வெளிவருகிறது. இதற்கு முன்னதாக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை ஒழிப்பு […]
நம்ம பிள்ளைகளை விஜய் கட்சிக்கு விட்றாதீங்க… சீமான் சீரியஸ் கட்டளை

நடிகர் விஜய் கட்சி தொடங்குவதால் யாருக்குப் பாதிப்பு இருக்கிறதோ இல்லையோ, சீமான் கட்சிக்கு பெருவாரியான இழப்பு வரும் என்பதே யதார்த்தமான உண்மை. ஏனென்றால், சீமானுடைய கட்சியில் 18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்கள் அதிகம் இருக்கிறார்கள். விஜய் பந்தக்கால் நடுவதற்கே 5 ஆயிரம் பேர் ஒன்று கூடியிருக்கிறார்கள். இதை கவனித்து, விஜய் முந்திக்கொள்ளக் கூடாது என்று சீமான் இன்று அறிக்கை விட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்று சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘’தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நவம்பர் […]
சொதப்பலான விஜய்யின் பந்தக்கால் விழா. தீவிர ரசிகர்களுக்கும் திடீர் ரசிகர்களுக்கும் பதவிப் போட்டி

அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடு நடைபெறும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு பந்தக்கால் நடுவது வழக்கம் தான். அது, நிகழ்ச்சியை நடத்தும் பகுதியின் பொறுப்பாளரும், மாநாட்டுக் குழுவினரும் சேர்ந்து சிம்பிளாக செய்து முடிப்பார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் பந்தக்கால் நடும் விழாவுக்கு பெரும் கூட்டம் கூடினாலும் போதிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் சொதப்பலில் முடிந்திருக்கிறது. நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.. இதற்கான பந்தக்கால் […]
இளைஞரின் உயிரை பறித்த ரெயில் படிக்கட்டு பயணம்! சைதாப்பேட்டையில் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வைகை எக்ஸ்பிரைஸ் சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்தபடி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காலை நீட்டியபடி அமர்ந்திருந்த நிலையில் திடீரென்று அவரது இரண்டு கால்களும் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்த நடைமேடையில் உரசியதாக தெரிகிறது. அதில் நிலைதடுமாறி நடைமேடையில் விழுந்த அவர் சுமார் 150 […]
இயக்குனரான சூர்யா – ஜோதிகாவின் மகள்! விருது வென்றதால் குவியும் வாழ்த்து!

நட்சத்திர தம்பதியான சூர்யா ஜோதிகாவுக்கு கடந்த 2006ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் தியா என்ற மகளும், 14வயதில் தேவ் என்ற மகனும் உள்ளனர். சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த இவர்கள், தற்போது மும்பையில் குடிபெயர்ந்துள்ளனர். தாய், தந்தை போலவே மகள் தியாவுக்கும் சினிமா மீது அதிக ஆர்வம் உள்ளது என்பது தற்போது நடந்திருக்கும் சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது. திரிலோகா இன்டர்நேஷனல் பிலிம்பேர் விருது நடத்திய போட்டியில் […]
ஜக்கி வாசுதேவ் மீது விசாரணைக்குத் தடை..! கொண்டாட்டத்தில் ஈஷா மையம்

ஈஷா யோகா மையம் போன்ற இடங்களில் ராணுவம், போலீஸார் நுழைவது சரியாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்பு காட்டியிருப்பதை அடுத்து ஜக்கி வாசுதேவ் நிம்மதிப் பெருமூச்சு விடுத்துள்ளார். ஒரு சாதாரண விஷயத்திற்கே உச்சநீதிமன்றத்தில் போய் தடை வாங்குகிறார்கள் என்றால் மிகப்பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று கொதிக்கிறார்கள், ஈஷா யோக மைய எதிர்ப்பாளர்கள். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்த ஈஷா யோகா மையம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு கோவை வடவள்ளி […]
பா.ஜ.க. கூட்டணிக்கும் துண்டு போடுகிறாரா திருமாவளவன்..? சர்ச்சையாகும் ராஜாஜி கட் அவுட்

கருணாநிதி நாணயம் வெளியீட்டுக்குப் பிறகு பா.ஜ.க.வுடன் இணக்கமாக ஸ்டாலின் இருந்துவருகிறார். அதே பாணியில் ராஜாஜி கட் அவுட் மூலம் பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் போட்டு வைக்கிறாரா திருமாவளவன் என்று எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் ‘மது – போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுத்’ திடலில் மூதறிஞர் ராஜாஜியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. மது விலக்குக்கைக் கொள்கையாகக் கொண்டவர் என்பதாலே அவருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பதாக திருமாவளவன் கூறியிருக்கிறார். ஆனால் […]
தாயின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகன்! என்ன தண்டனை தெரியுமா?

பெற்ற தாயை கொலை செய்த மகன் அவரின் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூரம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த கொடூரனுக்கு ரொம்பவும் ஸ்பெஷலான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அது என்னவென்று விரிவாக பார்க்கலாம். கடந்த 2017ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் குச்சொரவி என்ற இளைஞர் தனது 63 வயது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயை கொடூரமாக கொலை செய்த குச்சொரவி, அவரின் உடலின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயம் மற்றும் விலா எலும்புகளை எண்ணெயில் வறுத்து […]
த.வெ.க. முதல் மாநாடு பூஜை! எப்போது எங்கே தெரியுமா?

தமிழக வெற்றிக்கழகத்தோட முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில இந்த மாதம் (அக்டோபர்) 27ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் முன்னதாக தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட வேண்டும் […]
பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம்!

தமிழக அரசின் உத்தரவின்படி முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி உயர்கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் உயர்கல்வித்தறை செயலாளராக கோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். * கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். * தமிழ்நாடு தலைமை தேர்தல் […]

