ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது! ரகசிய இடத்தில் விசாரணை!

ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், வள்ளுவர் உள்ளிட்டோரை இழிவுப்படுத்தி பேசியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாக பேசியும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேச்சுக்கு […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆவணித் தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு கடந்த 4ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி& அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் அலங்காரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்நிலையில் […]
மனைவியுடன் கோவிலுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர்! அரிய புகைப்படங்கள்!

ஜி20 மாநாட்டை தொடர்ந்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தனது மனைவியுடன் அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு வருகை புரிந்தார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரிஷிசுனக் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். அலுவல் ரீதியாக டெல்லி வந்தாலும், தன் சொந்த மண்ணில் மனைவி அக்ஷதா மூர்த்தியுடன், அக்ஷர்தாம் […]
திருப்பதியில் இலவச வி.ஐ.பி.தரிசனம் வேண்டுமா? இதை செய்யுங்கள்!

ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ என்ற நாமத்தை எழுதுபவர்கள் விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு செல்வது வழக்கம். அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல் சர்வதேச அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற ஆலோசனைக் […]

