பிறந்தது புரட்டாசி மாதம்! திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நற்செய்தி!

தினந்தோறும் ஏழுமலையானை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி செல்வது வழக்கம். காசுக்கடவுளான ஏழுமலையானை காண வரும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையும், அங்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்த செய்தியுமே அக்கோவிலின் சிறப்பம்சங்களை விளக்கும். சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால், பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் என்றால் கேட்கவேண்டுமா? லடசக்கணக்கான பக்தர்கள், ஏழுமலையானின் தரிசனம் வேண்டி பல மணிநேரம் கால்கடுக்க காத்திருந்து குடும்பத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அப்படிப்பட்ட பக்தர்களுக்கான செய்திதான்இது. திருப்பதிக்கு செல்வற்காக பல்வேறு […]
தேநீர், உணவு இடைவெளிகளில் உடலுறவு! ரஷியர்களுக்கு அதிபர் புதின் உத்தரவு!

பணியிடங்களில் உணவு மற்றும் தேநீர் இடைவெளிகளை உடலுறவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷியா உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் ரஷியாவின் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு 2.1 சதவீதம் என்ற அளவுக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் அது தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. […]
7 பேரை பலி வாங்கிய 400 ஆண்டு கால பழமையான கோட்டைச்சுவர்! எங்கே தெரியுமா?

400 ஆண்டு கால பழமையான கோட்டைச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்ததில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் டாடியா நகரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 400 ஆண்டு கால பழமையான ராஜ்கர்கோட்டை சுவர் திடீரென்று இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த திடீர் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அதிகாலை 4 மணிக்கு […]
மதுரை விடுதிகளில் திடீர் ஆய்வு! விசாகா விடுதி தீ விபத்து எதிரொலி!

மதுரை விசாகா பெண்கள் தங்கும் விடுதியில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் விசாகா என்ற தனியார் பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறியதில் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் கரும்புகை வந்ததால், சரண்யா, […]
குரங்கு அம்மை அலர்ட்! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை!

டெல்லியில் நோயாளி ஒருவருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது. டெல்லியில் எம்பாக்ஸ் வைரஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பதாக […]
ஆன்மீக சொற்பொழிவு: பணியிடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை!

சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேலநிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் மத்தியில் மகாவிஷ்ணு மூடநம்பிக்கையையும், பிற்போக்குத்தனமான கருத்துகளையும் சொற்பொழிவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் சொற்பொழிவை கண்களை மூடியபடி கேட்டுக் கொண்டிருந்த மாணவிகள் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலானது. அவர் பேசும்போது, மாணவிகள் அழகாக பிறக்காததற்கும், மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதற்கும் முற்பிறவிகளில் அவர்கள் செய்த பாவம்தான் காரணம் என்று பேசினார். மேலும் மறுபிறவி, பாவம், புண்ணியம், […]
கோட் திரைப்படம்: கேரளாவில் அதிசயத்தை நடத்திய ரசிகைகள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படமான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் இன்று (செப்.5) உலகளவில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகை த்ரிஷா, நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது. இவை எல்லாவற்றையும் அடித்து துவம்சம் செய்துள்ளது மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஏ.ஐ. காட்சிகள்தான். யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது என்று […]
விநாயகர் சதுர்த்தி: சென்னை-& கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 7ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இது வார இறுதி நாள் என்பதாலும் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதாலும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி பயணிகளின் விருப்பத்திற்கிணங்க சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று (6ம் தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, […]
உறக்கத்திலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி! உயிரை பறித்தது ஆன்லைன் நூடுல்சா?

ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்து வாங்கி சமைத்து சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்குள் இருந்தபடியே ஆன்லைனில் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் என அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்யும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் விற்பனையாளர்களும் கண்களை கவரும் வகையில் வண்ண மயமாக விளம்பரங்களை உலாவர செய்கின்றனர். அதிலும் தள்ளுபடி, சலுகை இருந்தால் […]
வி.ஜே.சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத்துடன் விடுவிக்கப்பட்ட 7 பேர்!

சின்னத்திரை நடிகையும் விஜேவுமாக இருந்த சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து சித்ரா, கோழை கிடையாது. அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கருத்து தெரிவித்தனர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த […]

