News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

+ 2 தேர்வு முடிவுகள் வெளியீடு. கூல் மாணவர்களே கூல்…

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவு பெற்றதை அடுத்து இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் நிறைவு பெற்றன. இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அதன் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023 […]

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகத்தில் மொத்தம் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களால் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பணி மற்றும் கல்வி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் தங்கியுள்ள பொதுமக்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களில் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பண்டிகை காலங்களில் தமிழக போக்குவரத்துக்கழகம் […]

கழிவுநீர் தொட்டியில் விழுந்து எல்.கே.ஜி. மாணவி பலி!

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயதான எல்.கே.ஜி. மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் சிவசங்கரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய 4 வயதான லியா என்ற மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். இந்நிலையில் இன்று (ஜனவரி 3) உணவு இடைவெளியின் போது சிறுமி லியா கழிவுநீர் தொட்டிக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்த கழிவுநீர் தொட்டிக்கு […]

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு !

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.    இதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சென்னையில் இன்றிரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ்  கொண்டாட சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . சென்னையில் 350 தேவாலயங்களில் சுழற்சி முறையில் போலீசார் கண்காணிக்க […]

நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு! பின்னணியில் முதல்வரா?

  நடிகர் அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீசப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.   நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 5ம் தேதி புஷ்பா2 ரிலீசானது. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது. திரைப்படம் ரிலீசாவதற்கு முதல் நாள் ஐதராபாத்தில் இயங்கி வரும் சந்தியா திரையரங்கில் படம் ரிலீசானது. இதில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அல்லு […]

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா! இலவசமாக வழங்க முடிவு!

உலகளவில் மக்களை ஆட்டிப்படைத்து வரும் நோய்களில் முதன்மையாக விளங்குகிறது புற்றுநோய். உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகத்திற்கும் என்று தனித்தனி புற்றுநோய் ஏற்பட்டு, மக்களை ஆட்டிப்படைத்து உயிர்க்கொல்லியாக இருந்து வருகிறது. ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் நோயாளிகள் உயிர் பிழைப்பதும், முற்றிய நிலையில் கண்டுபிடிக்கும் பட்சத்தில் சிகிச்சை பலனின்றி மக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாகிவிட்டது.    மேலும் அன்றாட வாழ்க்கையில் மக்கள் கடைபிடித்து வரும் உணவுப்பழக்க வழக்கங்களும் புற்றுநோய்க்கான காரணியாய் அமைந்துவிடுவது துரதிருஷ்டத்தின் உச்சம். இதற்கான தடுப்பூசி இன்னும் […]

எலி கடித்ததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அரசு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்த 10ம் வகுப்பு மாணவியை 15 முறை தொடர்ந்து எலி கடித்ததால் அவரது கை மற்றும் கால் செயலிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள கம்மம், தானவாய் குடத்தில் பி.சி. நல விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு லட்சுமி பவானி கீர்த்தி என்ற 10ம் வகுப்பு மாணவி தங்கி படித்து வந்துள்ளார். அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 8 மாதங்களில் மாணவியை 15 […]

அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்த மக்கள்!

திண்டுக்கல் அருகே , அடிப்படை வசதிகள் கேட்டு சாலையில் தேங்கிய மழைநீரில் குளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து  இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    திண்டுக்கல்லை அடுத்த ராஜக்காபட்டி அருகே லட்சுமிநாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ள. இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பிறகு பராமரிப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் சாலை சேதமடைந்து மண் பாதையாக மாறியது.   இதையடுத்து    சாலையை சீரமைக்கக்கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் […]

மாமல்லபுரத்தில் விபரீதம்: கார் மோதி 5 பெண்கள் பலி

மாமல்லபுரம் அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள், கார் மோதி தூக்கி வீசப்பட்டதில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.   மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு ஈ.சி.ஆர். பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் பெண்கள் கூட்டம் கூட்டமாக மாடு மேய்த்து செல்வது வழக்கம். அதன்படி இன்று (நவம்பர் 27) மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் அமர்ந்தபடி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 […]

பள்ளியில் பூரி சாப்பிட்ட மாணவன் உயிரிழந்த சோகம்! என்ன நடந்தது தெரியுமா?

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளியில் மதிய உணவு நேரத்தில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா புறநகர பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் வீரேன் ஜெயின் என்ற 6ம் வகுப்பு மாணவன் பயின்று வந்தான். வழக்கம் போல் மதிய உணவு நேரத்தில் வீரேன் ஜெயின் தான் வீட்டில் இருந்து கொண்டு வந்த பூரியை சாப்பிட ஆரம்பித்தான். அதாவது தான் கொண்டு வந்த 2 பூரிகளையும் ஒன்றாக சுருட்டி சாப்பிட்டுள்ளான். […]