News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்! எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம், திருச்சியில் சீனிவாசன், பெரம்பலூரில் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் சரவணன் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திண்டுக்கல் ஆகியவை பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புதிய வழக்கு! ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் […]

தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்த தருமை ஆதீனம்! முக்கிய பின்னணி!

தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தமிழக அரசுக்கு ஓதுவார்கள் நியமனம் குறித்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. தமிழகத்தில் யாரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழக அரசு அமலுக்கு கொண்டு வந்து ஓதுவார் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஓதுவார்கள் நியமனம் குறித்து தருமை ஆதீனம் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், ‘‘தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் […]

அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! முக்கிய தகவல்கள்!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசியது இந்திய அளவில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியது. வடமாநில சாமியார் ஒருவர், உதயநிதியின் தலைக்கு 10கோடி ரூபாய் அறிவித்ததும், இருவருக்கும் இடையில் வார்த்தை போர் வெடித்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என சுமார் […]

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50,000 பேருக்கு அரசுப் பணி! முதலமைச்சர் உறுதி!

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. அதன்படி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பணி ஆணைகளை வழங்கினார். பணி ஆணைகளை வழங்கிய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘அரசின் […]

கர்நாடக- தமிழக எல்லைகளில் பதற்றம்! செப்.29 முழு அடைப்பு போராட்டம்!

காவிரி விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் அதற்கு 2 ஆயிரம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி நேற்று (செப்.26) பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கடைகள், நிறுவனங்கள், […]

அக்.14 சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வருகை! நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பின்னணி!

நாடாளுமன்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி அழைப்பை ஏற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி தமிழகம் வருகிறார். இது வரப்போகும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டிற்கான வருகையா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 14ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள […]

தொல்.திருமாவளவனுக்கு போன் செய்த இ.பி.எஸ்.! கதை அப்படி போகுதா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான தொல்.திருமாளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போன் செய்து நலம் விசாரித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவனுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அவரை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற 30ம் தேதிவரை தொல்.திருமாவளவனை தொண்டர்கள் மற்றும் கட்சி […]

அடுத்த செக் சந்திரபாபு நாயுடு மகனுக்குதான்! ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பு!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனான நாரா லோகேஷை அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு ஊழல் வழக்கில்  14வது குற்றவாளியாக சேர்த்துள்ளது ஆந்திராவில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்-வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு 118 கோடி ரூபாய் சட்டவிரோதமாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கடந்த […]

ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம்? கட்டுமான தலைவர் முக்கிய தகவல்!

வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற்று தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி தினத்தன்று கருவறையில் உள்ள தெய்வத்தின் நெற்றியின் மீது சூரியக்கதிர்கள் விழும் வகையில் கோவிலின் சிகரத்தில் நிறுவப்படும் ஒரு கருவியை வடிவமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் […]